நல் ஆசிரியர் விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 46 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நல் ஆசிரியர் விருது வழங்கினார்.
புதுடெல்லி,
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருது வழங்கினார். 61-வது நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இதுவாகும்.