‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்’’ தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் தகவல்

‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்’’ என்று தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் கூறினார்.

Update: 2019-09-05 02:44 GMT
பெங்களூரு-

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பெங்களூருவில் இந்திய தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் சுனில் அரோரா நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. இந்த பெயர் நீக்கம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை 521 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் விசாரிக்கின்றன. தீர்ப்பாயங்களின் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள்தான்’’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி அவர் பேசும்போது, ‘‘இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது மற்றும் அரசியலமைப்பில் திருத்தங்கள் உள்ளிட்ட உரிய செயல்முறைகளை முடித்த பின்னரே இதை செயல்படுத்தப்பட வேண்டும். கொள்கை அளவில் தேர்தல் ஆணையம் ஒரு நாடு-ஒரு தேர்தல் என்ற கருத்தை ஆதரிக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்