காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம்
காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. வதந்திகள் பரவி வன்முறை ஏற்படாமல் தடுக்க அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 30 நாள்கள் ஆன நிலையிலும் அங்கு பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், தங்களது சொந்த வாகனங்களில் பலர் அலுவலகத்துக்கு சென்றனர். வாடகைக் கார்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.