“நல்லாசிரியர்” விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-03 15:46 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களை இன்று டெல்லியில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுகிறது. 

தமிழகத்தின் கோபிச்செட்டிப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வ கண்ணன் ஆகியோர்  இந்த நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வருகை தந்துள்ள ஆசிரியர்-ஆசிரியைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கூறியதாவது:-

நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு எனது பாராட்டுகள்! நல்ல ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகள் மற்றும் விதிவிலக்கான ஞானத்தை வழங்குபவர்கள். 

ஆசிரியர்களில் தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.  செப்., 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று முன்னதாக விருது பெற்றவர்களுடன் உரையாடுவதற்கும், இளம் மனதை மாற்றுவதற்கான அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்