இந்தியாவின் பொருளாதார நிலை: '5 சதவீதம்' என ப. சிதம்பரம் விமர்சனம்

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து நீதிமன்ற வளாகத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

Update: 2019-09-03 13:57 GMT
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந்தேதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந்தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2-ந்தேதி (நேற்று) வரையும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த  உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 5-ஆம் தேதி வரை  நீட்டித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து நீதிமன்ற வளாகத்தில்  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை '5 சதவீதம்' என  ப. சிதம்பரம் 
மோடி அரசை மறைமுகமாக விமர்சித்தார்.

மேலும் செய்திகள்