ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை - வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்

ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை தர உள்ளார். அங்குள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.

Update: 2019-08-10 22:22 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக வயநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் வயநாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, அந்த தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து கேரளா வருகிறார்.

மேலும், வயநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உதவி செய்யுமாறு ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்