குடிநீர் பற்றாக்குறை : தமிழகத்திற்க்கு உதவுவதாக ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவிடம் சென்னைக்கு உதவுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்தார்.

Update: 2019-08-09 19:42 GMT
அமராவதி,

சென்னையில் இந்த ஆண்டு பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  சென்னையில் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் பற்றாகுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் அமைச்சர்க்ள் குழு ஒன்று இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தது. 

அந்த குழுவில் நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். அமராவதியில் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அவர்கள், சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து எடுத்துரைத்தனர். இதனை சமாளிக்க தமிழக அரசிற்கு உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கோண்ட ஆந்திர முதல்வர், சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மேலும், “அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும். மக்கள் பாதிக்கப்படும் போது நாம் மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்