கேரளாவில் நிலச்சரிவு: பலர் மாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி மாயமாகியுள்ளதால மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சிலநாட்களாக பெய்யும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தில் மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் நிலவுகிறது. மழை தொடரும் நிலையில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆழப்புலா, கோட்டயம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வயநாடு மாவட்டத்தில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 40 பேராவது சிக்கியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் குறித்து முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்தினார். அரசு அளித்துள்ள தகவலின்படி வெள்ளத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணவில்லை என்றும், 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 738 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.