காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர்

காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-08-08 14:43 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் பற்றிய அறிவிப்பு வெளியானநிலையில்,  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மோடி கூறியதன் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

*ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் துயரை பாஜக அரசு துடைத்துள்ளது

*காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது.

*காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

*காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 

* 370வது சட்டப்பிரிவு இருந்ததால், காஷ்மீர் மக்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி யாரும் பேசவில்லை

* 370, 35 ஏ இருந்ததால் தீவிரவாதம் வன்முறை ஊழல்தான் இருந்தது.

* காஷ்மீர், ஜம்மு லடாக் வளர்ச்சி தடைப்பட்டது

* காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

மேலும் செய்திகள்