நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Update: 2019-08-08 09:31 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி   நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றுகிறார்.  முன்னதாக, மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆல் இந்தியா ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று  தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரவு 8 மணியளவில்  உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது உரையில் எடுத்துரைக்கலாம் எனத்தெரிகிறது.  
ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மட்டுமே பிரதமர் மோடி கருத்து கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்