மகாராஷ்டிராவில் படகு விபத்து; 9 பேர் பலி
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட படகு விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
புனே,
மகாராஷ்டிராவில் சங்கிலி மாவட்டத்தின் பாலஸ் பிளாக்கிற்கு உட்பட்ட பம்னால் பகுதியருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 27 முதல் 30 கிராமவாசிகள் வரை பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 16 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.