75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடாளுமன்றத்துக்கு நவீன கட்டிடம் - பிரதமருக்கு சபாநாயகர் வேண்டுகோள்

75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடாளுமன்றத்துக்கு நவீன கட்டிடம் வேண்டும் என பிரதமருக்கு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-05 20:40 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடாளுமன்றம் தனது 75-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. அனைத்து முக்கியமான முடிவுகளும் ஜனநாயகத்தின் கோவிலான இங்கு தான் எடுக்கப்படுகிறது. அதற்கு வழிகாணும் அதேசமயம், பொறுப்புகளும் அதிகரித்து வருகிறது. உலகின் பெரிய குடியரசு மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.

எனவே நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் 2022-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்ற கட்டிடம் வேண்டும் என்று நான் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

மேலும் செய்திகள்