பிரதமர் மோடியின் "திறன் இந்தியா திட்டம்" தோல்வி: பிரியங்கா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திறன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி "திறன் இந்தியா திட்டம்" தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தை எதிர்த்து, இது "எதைப் பற்றியும் அதிகம் பேசவில்லை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். "பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா" வின் கீழ் பயிற்சி பெற்ற கிட்டத்தட்ட 72 லட்சம் பேரில், 15.23 லட்சம் (21 சதவீதம்) பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்ததாக ஒரு ஊடக அறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது :-
"மோடி அரசாங்கத்தால் மிகுந்த ஆரவாரத்துடன் உத்தரபிரதேசத்தில் தொடங்கப்பட்ட "திறன் இந்தியா திட்டம்" மூலம் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, ஆனால் 2 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது" என்று அவர் ஒரு டூவிட்டில் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் பதிலளிக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.