பூமியை சந்திரயான்-2 முதல்முறையாக எடுத்து அனுப்பிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ

பூமியை சந்திரயான்-2 முதல்முறையாக எடுத்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Update: 2019-08-04 10:21 GMT
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில்  சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம்  ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் 20-ம் தேதி நிலவை சென்றடைகிறது. அதன்பின் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் கருவி விக்ரம் நிலவில் தரையிறங்கி ரோவர் கருவி பிரக்யான் ஆய்வு செய்யும். சந்திரயான் விண்கலம் கடந்த 22-ம் தேதியில் இருந்து பூமியின் ஒவ்வொரு சுற்றுவட்டப்பாதைக்கும் உயர்த்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் பூமியை சந்திரயான்-2 முதல்முறையாக எடுத்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் விண்கலத்தில் உள்ள விம்ரம்லேண்டரின் எல்ஐ4 கேமரா பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இஸ்ரோ இதுதொடர்பான புகைப்படஙக்ளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில்,  சந்திரயான் விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் கருவியில் இருக்கும் எல்ஐ4 கேமரா மூலம் பூமியை பல்வேறு கோணங்களில், தொலைவுகளில் புகைப்படம் எடுத்து சந்திரயான்-2 அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் சனிக்கிழமை மாலை 5.28 மணி 5.29, 5.32, 5.34, ஆகிய நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இப்படங்கள் பூமியின் மேல் 2,450 கிமீ, 3200 கிமீ, 4,100 கிமீ, 4,700கிமீ, 5000 கிமீ ஆகிய பல்வேறு உயரங்களில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்