அரியானாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 வாலிபர்கள் கைது

அரியானாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-03 20:15 GMT
ஹிசார்,

அரியானா மாநிலத்தில் உள்ள ராணுவ கண்டோண்மெண்ட் பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கட்டிடத்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் ராணுவ தகவல்களை உளவு பார்த்து, பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளனர். இதை கண்டுபிடித்த ராணுவ போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. உளவு தகவல்களை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்