ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை : பயங்கரவாதி பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்திலுள்ள சோபூர் நகரத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.