திரிபுரா உள்ளாட்சி தேர்தல்; பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு
திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 27ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இங்குள்ள 6 ஆயிரத்து 646 இடங்களை தேர்வு செய்ய மொத்தம் 12 லட்சத்து 3 ஆயிரத்து 70 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 16 ஆயிரத்து 893 பேர், 5 லட்சத்து 86 ஆயிரத்து 176 பேர் பெண்கள் ஆவார்கள்.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 646 இடங்களில் 5 ஆயிரத்து 652 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது 85 சதவீதம் ஆகும். ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற கட்சியினர் மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்து உள்ளது.