ஜார்கண்டில் பஸ் விபத்தில் 22 போலீஸ்காரர்கள் காயம்
ஜார்கண்டில் பஸ் விபத்தில் 22 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சென்ற பஸ்களில், ஒரு பஸ் மட்டும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மலையின் மீது மோதியது. இதில் 22 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜ்ரப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.