கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்
கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவா மாநிலத்தில் பாபு கவேல்கர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.க்கள் ஆளும் பாஜகவில் இணைந்தனர். கர்நாடகாவை தொடர்ந்து கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். எம்.எல்.ஏக்கள் இணைந்தது குறித்து கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மாபெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 15 எம்எல்ஏக்களில் 10 பேர் ஆளும் பாஜகவில் இணைந்தது கோவா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.