டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன்

டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 2 சுங்க அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-07 11:45 GMT
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அணுகிய 2 சுங்கத்துறை சூப்பிரண்டுகள், அவரது உடமைகளை பரிசோதிக்க வேண்டும் என்று கண்காணிப்பு கேமரா இல்லாத தனியறைக்கு அழைத்துச் சென்றனர். பெண் அதிகாரியை உடன் வைத்துக் கொள்ளாமல், சோதனை என்ற பெயரில் அவர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்க அதிகாரிகளிடம் உஸ்பெகிஸ்தான் பெண் புகார் கூறினார். 

ஆனால் போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டப்பட்டதாகவும், அதனால் பின்வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அம்பலமானதால், 2 அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், இதுகுறித்து விசாரிக்க உள்மட்ட புகார்கள் குழு அமைக்கப்பட்டது. சிவில் கோர்ட்டு அதிகாரத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, குற்றம் சாட்டப்பட்ட 2 சுங்க அதிகாரிகளுக்கு ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. தங்கள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்