எனது ஆலோசனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டவில்லை - சுப்பிரமணிய சாமி

எனது ஆலோசனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-04 17:57 GMT
புதுடெல்லி,

அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணிய சாமி . அவர் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து தெரிவித்த பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இதேபோல் ராமர் கோவில் விவாகரம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடிக்கடி பல்வேறு ஆலோசனைகளை சுப்பிரமணியன் சுவாமி வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுப்பிரமணிய சாமி,

"சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் 'சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அதில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்துள்ளார்கள். 

ஆனால், பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டவில்லை . நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்"  என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்