பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்

மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Update: 2019-07-04 06:34 GMT
புதுடெல்லி

பொருளாதார ஆய்வறிக்கையை  மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். பொருளாதார ஆய்வு அறிக்கையில் 2019-20 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என கணிக்கபட்டு உள்ளது. எண்ணெய் விலை இந்த நிதி ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.

* நிலையான மேக்ரோ பொருளாதார நிலையில் நிதி ஆண்டு 2020-ல் அதிக வளர்ச்சியைக் காணும்.

* முதலீட்டு வீதம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. கடன் வளர்ச்சி 2020 நிதியாண்டில் அதிகமாகக் காணப்படும்.

* உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

* 2025-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 8% ஆக வைத்திருக்க வேண்டும்.

பொது நிதி பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது, இது 2019 நிதியாண்டில் 6.4% ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்