திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது
திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனபகுதியில் செம்மரம் கடத்துவதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து வனப்பகுதியில் நடத்திய சோதனையில் செம்மரம் கடத்தியதாக 24 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதில் 18 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானோர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் 30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.