கர்நாடக காங்கிரசுக்கு அதிகரிக்கும் பிரச்சனை, 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்; உன்னிப்பாக கவனிக்கும் பா.ஜனதா
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மற்றொரு எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிக்ஹோலியும் சபாநாயகரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காங்கிரசில் இருந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சென்ற நிலையில் கட்சியின் உறுப்பினர்களின் பலம் 77 ஆக குறைந்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசுக்கு 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அங்கு பெரும்பான்மைக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் தேவையாகும். பா.ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளது. ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. உள்ளார்.
இப்போது இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது காங்கிரசுக்கு பெரும் பிரச்சனையாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியதை அடுத்து மற்றொரு எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிக்ஹோலியும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் இன்னும் ராஜினாமாவை உறுதிசெய்யவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்நோக்கும் பா.ஜனதாவும் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.