கொல்கத்தா அருகே இருதரப்பு இடையே மோதல் : இருவர் உயிரிழப்பு ; மம்தா பானர்ஜி அவசரக் கூட்டம்

கொல்கத்தா அருகே இருதரப்பு இடையே மோதல் நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவசரக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2019-06-20 10:18 GMT
மேற்கு வங்காளத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கிய வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அருகே பத்போரா பகுதியில் இருதரப்பினர் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. மோதலின் போது துப்பாக்கி சூடு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சிறப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த வன்முறை சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்