பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-06-19 14:28 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தநிலையில் முசாபர்பூரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.  இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்