ஒடிசாவில் வீசும் கடும் அனல்காற்றால் பள்ளிகளுக்கு 25ந்தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு

ஒடிசாவில் வீசும் கடும் அனல்காற்றால் பள்ளிகளுக்கு வருகிற 25ந்தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-18 16:08 GMT
புவனேஸ்வர்,

ஒடிசாவில் கோடை விடுமுறைக்கு பின் நாளை (ஜூன் 19) பள்ளி கூடங்கள் திறக்க இருந்தன.  அங்கு கடும் அனல்காற்று வீசி வருகிறது.  இதனால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 25ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பள்ளி மற்றும் கல்வி துறை செயலாளர் பி.கே. மொகபத்ரா கூறும்பொழுது, தனியார் நடத்தும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் வருகிற 26ந்தேதி திறக்கப்படும் என கூறியுள்ளார்.

எனினும், சில பள்ளி கூடங்கள் நேற்றே திறக்கப்பட்டன.  ஒடிசாவில் பானி புயல் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து பல பள்ளி கூடங்கள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.  கடந்த ஆண்டு, கடும் வெப்பம் நிலவிய சூழலில் கோடை விடுமுறை ஜூன் 23ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  பின் ஜூன் 25ந்தேதி வரை மீண்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்