ரெயில்வே அதிகாரிகள் அலுவல் முறை பயணங்களுக்கு ரெயிலில் தான் செல்ல வேண்டும் - வாரிய தலைவர் உத்தரவு

ரெயில்வே அதிகாரிகள் அலுவல் முறை பயணங்களுக்கு ரெயிலில் தான் செல்ல வேண்டும் என வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-17 19:31 GMT
புதுடெல்லி,

ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் அனைத்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நமது சேவைகளுக்கு கிடைக்கும் மரியாதையை பற்றி அறிந்துகொள்வதற்கு ரெயிலில் பயணம் செய்வது தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும். நமது வாடிக்கையாளர்கள், பயணிகள் மூலம் பல தகவல்களை அறிந்துகொள்ள இது மட்டுமே உதவும். இதன்மூலம் நமது சேவைகளை மேம்படுத்தவும், புதிய சேவைகளை சேர்ப்பதற்கான ஆலோசனையும் நமக்கு கிடைக்கும்.

அனைத்து பொதுமேலாளர்கள், கோட்ட ரெயில்வே மேலாளர்கள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அலுவல் முறையில் செல்லும்போது அடிக்கடி ரெயிலில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அந்த சமயங்களில் அவர்கள் ரெயில் பெட்டிகளின் தரம், உயிரி தொழில்நுட்ப கழிவறை, உணவின் தரம் ஆகியவைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும். அதிகாரிகள் தரும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை சரிசெய்ய துறை தலைவர்களுக்கு பொதுமேலாளர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்