17-வது மக்களவையின் முதற்கூட்டம் துவங்கியது: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

17-வது மக்களவையின் முதற்கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-17 06:02 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது.  முன்னதாக, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த எம்.பி. வீரேந்திர குமார் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

17-வது மக்களவை கூடியதும்,  புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். முதலில் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் செய்திகள்