‘முத்தலாக்’ தடை மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
ஒரு குறிப்பிட்ட மதத்தில் உடனுக்குடன் 3 தடவை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தது. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால், அம்மசோதா காலாவதி ஆனது. ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், 17–ந் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘முத்தலாக் தடை மசோதாவில், குடும்பத்துக்கான நிதி பாதுகாப்பு உள்ளிட்ட ஒன்றிரண்டு அம்சங்கள் தொடர்பாக எங்களுக்கு அதிருப்தி உள்ளது. இதுகுறித்து சபையில் எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.