ஏ.என்.32 ரக விமான விபத்து: 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

அருணாச்சல பிரதேச விமான விபத்தில் உயிரிழந்த 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-13 13:36 GMT
புதுடெல்லி,

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டது. விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் என 13 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் கிளம்பிய ½ மணி நேரத்தில் விபத்திற்குள்ளானது. 

இந்நிலையில் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  விமான விபத்தில் உயிரிழந்த 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

கடந்த 10 நாட்களுக்கும் மேல் காணாமல் போன  ஏ.என்.32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். 

துரதிர்ஷ்டவசமாக அந்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்