ஆந்திராவின் ஆளுநரா? சுஷ்மா சுவராஜ் மறுப்பு

ஆந்திர பிரதேச மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டார் என்று வெளியான தகவலை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.

Update: 2019-06-10 18:28 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக மந்திரி சபையிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்து வந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.

இந்தநிலையில், இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில், “ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தனது டுவிட்டரில், “ ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுஷ்மா சுவராஜுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். பின்னர், அந்த டுவிட்டர் பதிவை அழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்