கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை கடலோர காவல் படை மீட்டது

கேரள கடலில் மூழ்கிய 6 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டது.

Update: 2019-06-09 20:17 GMT
கொச்சி,

கொச்சி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொல்லத்தில் இருந்து 35 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் படகு ஒன்று கடலில் சிக்கி மூழ்குவதாகவும் அதில் உள்ள 6 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடுவதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் உயிருடன் மீட்டனர்.

இதுதொடர்பாக கேரள மீன்வளத்துறை மீனவர்களுக்கு விடுத்த வேண்டுகோளில்‘ மோசமான வானிலை நிலவுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்