சர்வதேச யோகா தினம்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்டாட உத்தரவு

சர்வதேச யோகா தினத்தையொட்டி அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் கொண்டாட பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-08 17:11 GMT
புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014 -ம் ஆண்டு 175 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் மாதம் 21-ம் தேதியை உலக யோகா தினமாக கொண்டாட தீர்மானம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு  சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட உள்ளது. 

ராஞ்சியில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த ஆண்டு யோகா தினத்தை கொண்டாட கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு சில உத்தரவுகளை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்