ரமலான் பண்டிகை; ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்படட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Update: 2019-06-05 06:56 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள்.  பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கையெழுத்திட்ட, உருது மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது சமூகத்தில் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான தெய்வீக உணர்வு இந்த சிறப்புமிக்க நாளில் பற்றி பரவட்டும்.  ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்படட்டும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்