பயங்கரவாத நிதி விவகாரம்; மூன்று பிரிவினைவாத தலைவர்களுக்கு தேசிய புலனாய்வு பிரிவு காவல்
காஷ்மீரில் பயங்கரவாத நிதி விவகாரம் தொடர்பாக மூன்று பிரிவினைவாத தலைவர்களை தேசிய புலனாய்வு பிரிவு காவலுக்கு டெல்லி நீதிமன்றம் அனுப்பியது.
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க 2017-ம் ஆண்டு அதிரடி நடவடிக்கையை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டது. இதில் கைது நடவடிக்கையையும் மேற்கொண்டது.
பயங்கரவாத நிதியகம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவும், அமலாக்கப்பிரிவும் விசாரணையை மேற்கொண்டது. பிரிவினைவாதிகள் மசாரத் அலாம், ஷாபீர் ஷா, ஆசியா அண்டரபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டியுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.