மோடியை பாராட்டிய முன்னாள் எம்.பி. காங்கிரசில் இருந்து நீக்கம்

மோடியை பாராட்டிய முன்னாள் எம்.பி. காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-03 22:19 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அப்துல்லா குட்டி, காந்தியின் கொள்கைகளை பின்பற்றியதால் மோடி தேர்தலில் வெற்றிபெற்றார் என்று சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மோடியை பாராட்டியதற்காக முன்னாள் எம்.பி. அப்துல்லா குட்டியை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

அப்துல்லா குட்டி 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யாக இருந்தபோதும் குஜராத் வளர்ச்சிக்காக மோடியை பாராட்டினார். இதனால் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் காங்கிரசில் இணைந்தார். 2011-14 காலகட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தார். நீக்கம் பற்றி அப்துல்லா குட்டி கூறும்போது, “நான் மோடியை புகழவில்லை. காந்தியின் கொள்கைகளுக்கு உள்ள மதிப்பை தான் கூறினேன். இதனை காங்கிரஸ் விரைவில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்