காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவர் நடிகை ரம்யா, டுவிட்டரில் இருந்து வெளியேறினார் பின்னணி என்ன?
நடிகர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ‘குத்து’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா. இவர் ‘குத்து’ ரம்யா என செல்லமாக அழைக்கப்படுகிறார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்தான் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர்.
புதுடெல்லி,

இவர் டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி விட்டது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரி பதவி ஏற்றபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டார். அது அவருக்கு கட்சியில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது.
இந்த நிலையில் நடிகை ரம்யா, டுவிட்டரில் இருந்து வெளியேறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து கூறி கண்டனத்துக்கு ஆளானதால். இவர் டுவிட்டரில் இருந்து வெளியேறி இருக்கலாம் என பேசப்படுகிறது. ஆனால் அரசியலில் இருந்தே நடிகை ரம்யா தற்காலிகமாக விலகி இருக்க முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.