அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட வேண்டும் - பிரதமருக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம்
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்ட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.