தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரவளிக்கும் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டுவீட் செய்துள்ளார்.

Update: 2019-06-02 10:42 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மூலம் இந்தியை திணிக்கும் முயற்சி நடப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில்,

மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்