மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் சியாச்சின் பனிமலைக்கு நாளை பயணம்

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் சியாச்சின் பனிமலைக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2019-06-02 07:30 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி, 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 கேபினட் மந்திரிகள் உள்பட 57 மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்.  இதில், முன்னாள் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்பு துறை வழங்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் முறைப்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.  இதன்பின் அவர் தனது முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார்.  இந்த பயணத்தின்பொழுது ராணுவ தளபதி பிபின் ராவத்தும், ராஜ்நாத் சிங்குடன் செல்கிறார்.

மேலும் செய்திகள்