ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சியினரிடையே மோதல்; ஒருவர் பலி

ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார்.

Update: 2019-06-01 10:48 GMT
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் முறைப்படி பதவியேற்று கொண்டார்.  அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் பதளபள்ளி மண்டல் பகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தொண்டர்களிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.  4 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.  எனினும், அவர்கள் ஆபத்து கட்டத்தினை கடந்து விட்டனர்.  இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ஐ.பி.சி.யின் 302 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்