வாரணாசியில் 4¾ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி அமோக வெற்றி

வாரணாசி தொகுதியில் 4¾ லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

Update: 2019-05-23 23:34 GMT

வாரணாசி, 

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2–வது தடவையாக போட்டியிட்டார். அவரைத் தவிர, மேலும் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

அவர்களில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஷாலினி யாதவ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் ராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பிரதமர் மோடி முன்னிலையில் இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அறிந்து வாக்கு எண்ணும் மையம் முன்பு பா.ஜனதா தொண்டர்கள் குவிய தொடங்கினர். அங்குள்ள கட்சி அலுவலகத்திலும் திரண்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

‘மோடி–அமித் ஷா வாழ்க’ என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் பிரதமர் மோடி முன்னிலையில் இருந்தார். அவரது வாக்கு வித்தியாசம் அதிகரித்தபடி இருந்தது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில், அவர் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்த 2–வது இடத்தை சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மேலும் செய்திகள்