மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சீதாராம் யெச்சூரி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் 1952–ம் ஆண்டுக்குப்பிறகு முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது.
புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தமிழகத்தில் 2 பேர் வெற்றி பெற்றனர். மேலும் கேரளாவில் ஒருவர் முன்னிலை பெற்றிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இதற்கு முதல் பொறுப்பு என்னுடையது. எனவே அதற்கு நானே பொறுப்பாவேன்’ என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் ஒரு உறுதியான முடிவை வழங்கியிருப்பதாக கூறிய அவர், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என்றும் தெரிவித்தார்.