காவிரியில் தண்ணீர் திறக்க இது சரியான தருணம் அல்ல -கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர்
காவிரியில் தண்ணீர் திறக்க இது சரியான தருணம் அல்ல. மழை இல்லை, மழை பெய்தால் பார்ப்போம் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறி உள்ளார்.
கும்பகோணம்
கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கர்நாடக அணையில் தற்போது தண்ணீர் இல்லை. மழை பெய்தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என கூறினார்.