ஐக்கிய ஜனதாதளம் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை

ஐக்கிய ஜனதாதளம் கட்சி பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-05-19 19:45 GMT
சமஸ்திபூர்,

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் மகி கிராமத்தை சேர்ந்தவர் அருண் சிங். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிரமுகரான இவர் தனது கிராமத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருண் சிங் மற்றும் அவரது மகன் மனஸ் குமார் ஆகியோரை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அருண் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்