ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.