‘கோட்சே ஒரு பயங்கரவாதி’ - மெகபூபா கருத்து

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பயங்கரவாதி என மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-17 19:30 GMT
ஸ்ரீநகர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பயங்கரவாதி என பேசினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் பிரக்யா சிங், கோட்சே தேச பக்தர் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியுமான மெகபூபா முப்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்துவதன் மூலம், அவரை பா.ஜ.க. அவமானப்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்