சன்னி தியோலுக்கு ஆதரவாக தந்தை தர்மேந்திரா பிரசாரம்

நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக அவரது தந்தை தர்மேந்திரா பிரசாரம் செய்தார்.

Update: 2019-05-11 20:26 GMT
குர்தாஸ்பூர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகர் சன்னி தியோல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவருடைய தந்தையும், நடிகருமான தர்மேந்திரா நேற்று குர்தாஸ்பூர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், என் மகன் சன்னி தியோல் அரசியலுக்கு புதிது தான். அரசியலில் அவருக்கு அடிப்படை கூட தெரியாது. அதற்காக அவர் போட்டியில் இருந்து பயந்து ஓடி விட மாட்டார். பிறக்கும் போதே யாரும் அரசியல்வாதியாக பிறப்பது இல்லை. சன்னி தியோல் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. எல்லை பகுதியில் இருக்கும் இந்த மாவட்ட மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளார் என்றார்.

மேலும் செய்திகள்