பெங்களூரு : தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்

பெங்களூரு நகரில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-08 13:44 GMT
பெங்களூரு,

பெங்களூரு கலாசி பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாந்தம்மா என்பவர் நடைபயிற்சிக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரின் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளார். 

சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் பெங்களூருவில் தொடர் கதையாகி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்